சென்னையில் நடிகர் சசிகுமாருக்கு வழங்கப்பட்ட உயரிய விருது
#Actor
#TamilCinema
#Award
#Chennai
#Movie
Prasu
3 hours ago
சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று நிறைவடைந்தது. இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த விழாவினை நடத்தியது.
இந்த வருட திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி, 3 பிஎச்கே, மாமன், மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி, மருதம், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், பறந்து போ, அலங்கு, பிடிமண், காதல் உள்ளிட்ட 12 தமிழ் படங்களும் தேர்வாகி திரையிடப்பட்டன.
அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமலி படத்தில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த திரைப்படத்திற்கான விருது ராம் இயக்கிய 'பறந்து போ' படத்திற்கு வழங்கப்பட்டது. 2வது சிறந்த திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமலி தேர்வானது.
(வீடியோ இங்கே )