சிறையில் இருந்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான்

#Protest #people #Prison #Pakistan #ImranKhan
Prasu
6 months ago
சிறையில் இருந்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான்

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகும்படி இம்ரான்கான் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இம்ரான்கானின் எக்ஸ் வலைதள பக்கத்தில்"கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் சோஹைல் அப்ரிடிக்கு போராட்டத்திற்குத் தயாராகும்படி நான் ஒரு செய்தியை அனுப்பியுள்ளேன். 

முழு தேசமும் அதன் உரிமை களுக்காக எழுந்து நிற்க வேண்டும். இந்தத் தீர்ப்பு எந்த ஆதாரமும் இல்லாமல், சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நீதிபதியால் அவசரமாக வழங்கப்பட்டது. 

இவ்வழக்கில் எனது சட்டக் குழுவின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4