ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம்உத்தரவு!

#SriLanka #Arrest
Mayoorikka
6 months ago
ராமநாதன் அர்ச்சுனாவை  கைது செய்ய நீதிமன்றம்உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

 கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக ராமநாதன் அர்ஜுனா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 இந்த வழக்கு இன்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 ஏற்கனவே இந்த வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

 இதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்தது.

 போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4