தையிட்டி விவகாரம்: பொலிஸாரின் சித்திரவதை! வலி கிழக்கு தவிசாளர் வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Police #Hospital #Thaiyiddi
Mayoorikka
6 months ago
தையிட்டி விவகாரம்: பொலிஸாரின் சித்திரவதை! வலி கிழக்கு தவிசாளர் வைத்தியசாலையில் அனுமதி

தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றபோது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 இவர்கள் கைது செய்யப்பட்டபோது, பொலிஸாரால் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தற்போது 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4