கனடாவில் விபத்தில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Canada #Accident
Mayoorikka
1 hour ago
கனடாவில் விபத்தில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் உயிரிழப்பு!

கனடாவின் ரிச்மண்ட் ஹில் பகுதியில் மாலை வேளையில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் பின்னர், அவை வீதியால் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 இந்தச் சம்பவத்தில், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும், இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!