கனடாவில் தமிழ் மருத்துவர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது
#Arrest
#Canada
#doctor
#Sexual Abuse
#Tamil
Prasu
1 hour ago
கனடா ஸ்கார்பரோ பகுதியில் பல் மருத்துவர் நோயாளி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மருத்துவரிடம் 21 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தபோது, பாலியல் தாக்குதல் நடந்ததாக பொலிசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் டொராண்டோவைச் சேர்ந்த 66 வயதான முத்துகுமாரு இளங்கோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். பல் மருத்துவமனையின் பெயர் “டொக்டர் இளங்கோ அண்ட் அசோசியேட்ஸ்” என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )