இலங்கையில் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டமூலம்!

#SriLanka #Beauty
Mayoorikka
6 months ago
இலங்கையில் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டமூலம்!

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காகத் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) தலைவர் ஆனந்த விஜேவிக்ரம இதை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

 தற்போது இந்த சட்டமூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்களது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

 இந்தச் செயல்முறைகள் முடிவடைந்தவுடன், 2026 ஜனவரியில் பொதுமக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படும்.

 சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படும் 'நிறமூட்டும் அழகுசாதனப் பொருட்கள்' (Fairness Products) மற்றும் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் பொருட்கள் எவ்வாறு கண்காணிக்கப்படும் என்பது குறித்து இப்போதே கூறுவது கடினம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4