கனடாவில் டிராக்டர் விபத்தில் ஒரு குழந்தை உட்பட இருவர் மரணம்
#Death
#Canada
#Accident
Prasu
1 hour ago
கனடாவின் மொன்றியாலில், ஒரு ஏரியில் டிராக்டர் மூழ்கியதில் ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளனர்.
ஏரியைச் சுற்றியுள்ள பாதையில் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த இருவரும் டிராக்டரில் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சமயத்தில் டிராக்டர் திடீரென ஏரிக்குள் மூழ்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பான தேடுதல் நடவடிக்கை புதன்கிழமை இரவு செயின்ட்-செனோன் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மரண விசாரணை அதிகாரி விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், இதில் எந்தவித குற்றச்செயல் சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே )