மினுவாங்கொடையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மகசின் மற்றும் T-56 தோட்டாக்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மினுவாங்கொடை, ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
