நெடுந்தீவில் 03 இந்திய மீனவர்கள் கைது : படகுகள் பறிமுதல்!
#SriLanka
#Arrest
#Fisherman
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்திய மீனவர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கரைக்கு அழைத்து வரப்படும் நிலையில், அவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
