இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி தம்பதிக்கு £679,000 பிரித்தானிய பவுண்டுகள் அபராதம்
லண்டனில் சட்டவிரோதமாக வீட்டைப் பிரித்து ஆறு சிறிய குடியிருப்புகளாக அமைத்து வாடகைக்கு விட்ட இந்திய வம்சாவளி தம்பதிக்கு, சுமார் £679,000 பிரித்தானிய பவுண்டுகள்( இலங்கை: 28.4 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தர்ஜீத் சோக்கர் மற்றும் ஜஸ்விந்தர் சோக்கர் என்ற தம்பதியினர், ப்ரெண்ட் பகுதியில் உள்ள தங்களது மூன்று அறைகள் கொண்ட வீட்டை எவ்வித திட்ட அனுமதியும் இன்றி ஆறு சிறிய குடியிருப்புகளாக மாற்றியுள்ளனர்.
இந்த அறைகள் அனைத்தும் மிகவும் சிறியதாகவும், மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற சுகாதாரமற்ற நிலையிலும் இருந்துள்ளன. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் இவர்களுக்குக் கடுமையான அபராதங்களை விதித்துள்ளது.
மேலும், இந்த வீட்டின் மூலம் சட்டவிரோதமாகச் சம்பாதித்த £564,367 பிரித்தானிய பவுண்ட் தொகையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )