போலியான தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய கானா நாட்டு தீர்க்கத்தரிசி கைது

#Arrest #Lanka4 #Ghana
Prasu
6 months ago
போலியான தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய கானா நாட்டு தீர்க்கத்தரிசி கைது

கானா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எபோ நோவா என்ற நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று தெரிவித்து கொண்டு 2025 டிசம்பர் 25ம் தகுதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியப்போகிறது என குறிப்பிட்டிருந்தார்.

உலகம் அழியும்போது மக்களைக் காப்பாற்ற கடவுளின் உத்தரவின் பேரில், பைபிளில் வருவது போல 8 பெரிய கப்பல்களை கட்டி வருவதாக கூறினார்.

இவரது பேச்சைக் கேட்ட மக்கள் அதை நம்பி, பேழைகளைக் கட்டுவதற்கு பலர் தங்கள் உடைமைகளை விற்று பணத்தை அவருக்குக் கொடுத்துள்ளனர். 

அவர் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக்கொண்ட கடவுள் உலக அழிவை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்களிடையே பயத்தை ஏற்படுத்திய எபோ நோவா என்பவரை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி காவல்துறை கைது செய்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4