தையிட்டி விகாரை முன்பாக சட்டவிரோதம் என பெயர் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை! பொலிஸ் எச்சரிக்கை

#SriLanka
Mayoorikka
3 hours ago
தையிட்டி விகாரை முன்பாக சட்டவிரோதம் என பெயர் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை!  பொலிஸ் எச்சரிக்கை

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கமைய தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை முன்பாக சட்டவிரோத கட்டிடம் என பெயர் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபை செயலாளருக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தையிட்டி பகுதியில் தனியார் காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமகா விகாரையை சட்டவிரோத கட்டிடம் என அடையாளப்படுத்தும் வகையில் பெயர் பலகையை மூன்று மொழிகளிலும் நாட்ட பிரதேச சபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.

 இது தொடர்பிலேயே பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில்,தையிட்டி விகாரைக்கு முன்பாக சட்டவிரோத கட்டிடம் என பெயர் பலகை நடப்படப் போவதாக புலனாய்வுப் பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது.

 அதன்படி இவ்வாறான அறிவித்தல் பலகை காட்சிப்படுத்துவதன் மூலம் பௌத்தம் மற்றும் இந்து சமயத்துக்கு இடையிலான நல்லிணத்தில் முரண் நிலை தோன்றுவதுடன் சமாதான சீர்குலைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 இவ்வாறான பெயர் பலகை வலிகாமம் வடக்கு பிரதேச சபையினாலோ வேறு அமைப்புகள் மூலமோ நிறுவனங்கள் மூலமோ காட்சிப்படுத்தும் நோக்கம் இருப்பின் அதை சட்டரீதியாக மேற்கொள்ளுமாறும் சட்ட ரீதியற்ற முறையில் அவ்வாறு அறிவித்தல் பலகையை நாட்ட நடவடிக்கை எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றோம் – என்றுள்ளது.

 குறித்த விடயத்தை நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வில் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் வெளிப்படுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!