ரஜினி 173 குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை
#TamilCinema
#Kamal
#Movie
#RAJINIKANTH
Prasu
4 hours ago
கமல்ஹாசன் தயாரிப்பில் தான் ரஜினி அடுத்த படம் உருவாக இருக்கிறது. தலைவர் 173 என தற்காலிகமாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் முன்பு வெளிவந்தது. ஆனால் சில தினங்களில் கருத்து வேறுபாடு காரணமாக சுந்தர்.சி விலகுவதாக திடீரென அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் தலைவர்173 படத்தின் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை ஜனவரி 3ம் திகதி காலை 11 மணிக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டான் பட புகழ் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி தான் தலைவர்173 படத்தை இயக்க போகிறார் என தகவல் வந்திருக்கிறது.
(வீடியோ இங்கே )