மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் - சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு!
#SriLanka
#Mannar
#Court Order
#GunShoot
#ADDA
Thamilini
13 hours ago
மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர் ஆரம்பத்தில் கொழும்பில் உள்ள CID தலைமையகத்தில் 72 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரின் தடுப்புக்காவல் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசாரணைகளைத் தொடர ஏதுவாக சந்தேகநபரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”