கடைக்குச் சென்ற இளைஞன் மீது மதுபோதையில் இருந்த குழு தாக்குதல்!
மதுபோதையில் இருந்த குழு ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கில், புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியில் உள்ள கடைக்கு தாக்குதலுக்குள்ளான இளைஞன் பொருட்களை வாங்கச் சென்ற வேளை அவரை வழிமறித்த குழு தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் கையாலும்.
பொல்லுகளாலும் கடுமையாக தாக்கியுள்ளது. இன்னிலையில் குறித்த இளைஞன் தன்னை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டுள்ளார். இளைஞனின் கூக்குரல் கேட்டு அயலவர் சம்பவ இடத்துக்கு சென்றவேளை, தாக்கிய குழு தப்பி ஓடியுள்ளது.
இளைஞன், தலையில் பலத்த தாக்குதலுக்கு உள்ளானதால் மயக்கமுற்ற நிலையில் ஊரவர்களால், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான குறித்த இளைஞனுக்கு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும், மேலதிக சிகிச்சையின் அவசியம் கருதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து பாதிப்புக்குள்ளான இளைஞனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதே நேரம் குறித்த தாக்குதலை நடத்திய குழு மாடுகளை சட்டவிரோதமாக பிடித்து விற்பனை செய்யும் குழுவினர் என்றும்,
தாக்குதலுக்குள்ளான இளைஞன் சில மாதங்களுக்கு முன்னர் குறித்த குழுவினரது திருட்டு மாடு பிடிக்கும் சம்பவத்தை கையும் களவுமாக பிடித்திருந்த நிலையில் அவர்களை எச்சரித்திருந்தார் என்றும்
இதன் பின்னணியிலேயே இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”