ஐக்கிய மக்கள் சக்தி மற்றும், ஐக்கிய தேசிய கட்சி இடையே கூட்டணி ஏற்படுமா?
#SriLanka
#Sajith Premadasa
#Ranil wickremesinghe
#srilankan politics
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும், ஐக்கிய தேசிய கட்சி இடையே தேர்தல் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, எந்தவொரு கூட்டணியாயினும் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியே தலைமை தாங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நேர்மாறாக, UNP-ஐ சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும, அத்தகைய கூட்டணி உருவாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”