நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலை!

#SriLanka
Mayoorikka
1 day ago
நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். 

 மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

 சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில், ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 அந்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், ஜொஹான் பெர்னாண்டோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். 

 அத்துடன், சதொச நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவுக்கான முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டதுடன், நீதவானின் உத்தரவாதத்துக்கு அமைய அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!