இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் விமான சேவைகளை இயக்க திட்டம்!
#SriLanka
#Flight
#Singapore
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பிற்பகல் விமான சேவையைத் தொடங்கியுள்ளது.
இதன்படி ஜூன் 1 முதல் வாரத்திற்கு மூன்று கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இது 2026 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான 52 ஆண்டுகால சேவையில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த குடலியனகே கூறுகையில், சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் சேவையை இயக்க விமான நிறுவனம் தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”