இலங்கை பிரதமருக்கு ஆலோசனை வழங்கிய மல்வத்து மகாநாயக்க தேரர்
#SriLanka
#PrimeMinister
#Harini Amarasooriya
Prasu
2 days ago
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கல்வி என்பது உணர்வுபூர்வமானது.
இவ்விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தற்போது எழுந்துள்ள பிரச்சினை குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்துங்கள்.
புதிய கல்வி மறுசீரமைப்பை சிறந்த முறையில் அமுல்படுத்துங்கள். அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுள்ளது. தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை அவதானித்துள்ளோம்.
சிறந்த மாற்றத்தை நோக்கி செல்கையில் விமர்சனங்கள் எழுவது ஆச்சரியமல்ல, அதனை கவனிக்காமல் முன்னோக்கிச் செல்லுங்கள் என மல்வத்து மகாநாயக்க தேரர் பிரதமருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
(வீடியோ இங்கே )