கொழும்பு-கண்டி பிரதான சாலையில் விபத்து - ஒருவர் பலி, பலர் வைத்தியசாலையில்!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
மாவனெல்ல, பல்பத்த பகுதியில் கொழும்பு-கண்டி பிரதான சாலையில் இரண்டு பேருந்துகளும் ஒரு லொறியும் மோதி விபத்துக்குள்ளனாதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் மாவனெல்ல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் பிரேக்குகள் செயலிழந்தமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்