போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!
#SriLanka
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#currency
Abi
1 day ago
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ் சந்தி அருகே 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் ஐந்துடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (09) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்கள் இருவரும் களுத்துறை தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் 50 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர், மேலதிக விசாரணைகளை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்