பிரித்தானியாவை தாக்கிய கோரெட்டி புயல் - அவதியில் மக்கள்
#people
#Warning
#Climate
#England
#Strom
Prasu
15 hours ago
பிரித்தானியாவை தாக்கிய கோரெட்டி புயல் காரணமாக தென்மேற்கு, மிட்லாண்ட்ஸ் மற்றும் தெற்கு வேல்ஸில் ஏறக்குறைய 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் முறிந்து விழுந்தமையால் சில சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீத்ரோ விமான நிலையத்தில் குறைந்தது 69 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் 9,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டிருந்த கிழக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் பர்மிங்காம் ஆகிய விமான நிலையங்கள் நேற்யை தினம் தங்கள் ஓடுபாதைகளை மீண்டும் திறந்துள்ளன.
மேலும் சீரற்ற வானிலை காரணமாக வழக்கமான நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )