வடக்கு, கிழக்கில் 15ம் திகதி வரை மழை!

#SriLanka #Rain #East #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
6 hours ago
வடக்கு, கிழக்கில் 15ம் திகதி வரை மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே விவசாயிகள் அதற்கேற்ற வகையில் தங்களுடைய அறுவடைச் செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது. மத்திய, மேல், சபரகமுவா, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

அதேவேளை இரவில் வெப்பநிலையில் ஏற்படும் வீழ்ச்சியும், ஈரப்பதன் மாற்றமும் குளிரான வானிலையை ஏற்படுத்துகின்றன. இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

                                  இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!