விமல் வீரவங்சவை கைது செய்யுமாறு உத்தரவு

#SriLanka #Arrest #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
விமல் வீரவங்சவை கைது செய்யுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு மேல் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவங்ச அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், பிரதிவாதியின் பிணையாளர்களை அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

              

     இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!