வெள்ள நீர் தேங்கிவிடும் - சாய்ந்தமருது பெண்கள் சந்தையின் நிலை!

#SriLanka #Rain #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
வெள்ள நீர் தேங்கிவிடும் - சாய்ந்தமருது பெண்கள் சந்தையின் நிலை!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பெண்கள் சந்தை 10 நிமிடம் மழை பெய்தால் வெள்ள நீர் தேங்கும் பிரதேசமாக மாறுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

பருவ காலத்தில் அடிக்கடி வெள்ள நீரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற சந்தைப்பகுதியாகவும் இச்சந்தையை சூழ உள்ள மாநகர சபைக்கு உட்பட்ட உள்வீதிகளும் வெள்ள நீரில் மூழ்குவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு ஏற்படும் வெள்ள நீர் சந்தைக்கு வரும் மக்களை சிரமங்களுக்குள் உள்ளாக்குவதுடன் விபத்துக்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைகின்றன.

அத்துடன் இச்சந்தையை சுற்றி உள்வீதிகளில் காணப்படும் வடிகான்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமையினால் நீர் தேங்கி வெள்ள நிலைமை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். 

இது தவிர குறித்த சந்தை மேற்கூரையும் கவனிப்பாரற்று காணப்படுவதனால் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் சந்தைப்பகுதிக்கு தொடர்ச்சியாக வெள்ளம் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் வீசுவதுடன் சுகாதார அச்சுறுத்தலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

                   இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!