பதுளை மாவட்ட தொழிலாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
#SriLanka
#Badulla
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
பதுளை மாவட்ட தொழிலாளர் அலுவலகத்திற்கு இன்று (14) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவலக வளாகத்திற்குள் வெடிகுண்டு இருப்பwதாக அநாமதேய மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பதுளை மாவட்ட உதவி தொழிலாளர் ஆணையர் சுஜாதா குமாரி, இன்று காலை 9:24 மணியளவில் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும், அலுவலக வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களை வெளியேற்றுமாறும் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, பதுளை காவல் தலைமையகம் மற்றும் கொழும்பில் உள்ள தொழிலாளர் துறைக்கு இந்த விஷயம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்