தாய்லாந்தில் ரயில் மீது விழுந்த பாரிய கிரேன் - 28 பயணிகள் உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#Thailand
#Train
Thamilini
5 hours ago
தாய்லாந்தில் ரயில் ஒன்றின்மீது கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 80 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விபத்து நடந்த நேரத்தில் ரயிலில் சுமார் 195 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்