8 வருடங்களுக்கு பிறகு சீனா சென்ற கனடா பிரதமர் மார்க் கார்னி

#PrimeMinister #China #Canada #Visit
Prasu
1 hour ago
8 வருடங்களுக்கு பிறகு சீனா சென்ற கனடா பிரதமர் மார்க் கார்னி

கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சீனா செல்லும் கார்னி 16ம் திகதி அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், உலகளாவிய வர்த்தகக் குழப்பம் நிலவும் இந்த நேரத்தில் கனடா ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

ஒரே வர்த்தகப் பங்காளியைச் சார்ந்திருந்த நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம் என மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை மார்க் கார்னி சந்தித்தார். அப்போது சீனா வருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்ல கார்னி ஒப்புக் கொண்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!