சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் பணி நீக்கம்

#PrimeMinister #Parliament #Singapore #sacked
Prasu
5 months ago
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் பணி நீக்கம்

சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிதம் சிங் எதிர்க்கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

"பிரிதம் சிங்கின் குற்றவியல் தண்டனைகளும் அவர் அந்த பதவிக்குத் தகுதியற்றவர் என்பது குறித்த நாடாளுமன்றத்தின் ஆழமான கருத்தும் சேர்ந்து அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது இனி சாத்தியமில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன்" என சிங்கபூர் பிரதமர் லாரன்ஸ் வாங் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சி உடனடியாக மாற்று எதிர்க்கட்சி தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

49 வயதாகும் பிரிதம் சிங், தொழிலாளர்கள் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர் முன்னாள் எம்.பி. ரயீஷா கான் வழக்கில், பாராளுமன்ற நிலைக்குழு முன் பொய் தெரிவித்துள்ளார்.

இதனால் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு 10,700 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4