நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விளம்பரத்தில் நடித்த நடிகர் அஜித்குமார்
#Cinema
#Actor
#advertisements
#ajith
Prasu
3 hours ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தீவிர கார்பந்தய வீரரான அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி டிரிங்க் பிராண்டான 'கேம்பா எனர்ஜி' (Campa Energy), அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் என அறிவிப்பு வெளியானது.
கேம்பா எனர்ஜி ட்ரிங்க் விளம்பரத்தில் அஜித் நடித்துள்ளது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதன்மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் குமார் மீண்டும் விளம்பர உலகில் கால் பதித்துள்ளார்.
(வீடியோ இங்கே )