கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவனும் உயிரிழப்பு;
மன்னார் - பேசாலை கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் நேற்று மாலை கடலில் நீராடுவதற்காக சென்றுள்ளனர். நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதுடன் ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் காணாமல்போயிருந்த இளைஞனின் சடலம் நேற்று இரவு கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்