வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 95 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு!
வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் ‘சிவப்பு அறிவிப்புகள்’ பெறப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
இன்று (16.01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2024 ஆம் ஆண்டில் ‘சிவப்பு அறிவிப்புகள்’ மூலம் 10 சந்தேக நபர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்கள் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து குற்றங்களை நடத்தும் பல குற்றவாளிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன்படி ‘சிவப்பு அறிவிப்புகள்’ பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிகளின் விளைவாக, இரண்டு ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசாங்கம், அபுதாபி காவல்துறை, துபாய் காவல்துறை மற்றும் இலங்கை தூதரகங்களின் ஆதரவுடன், இலங்கை காவல்துறை சந்தேக நபர்களைக் கைது செய்து நாடு கடத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்