கண்டி மற்றும் நுவரெலியாவை இணைக்கும் பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்த இந்திய இராணுவம்!
இலங்கையின் B-492 நெடுஞ்சாலையில் பெய்லி பாலத்தை இந்திய இராணுவத்தினர் வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளனர்.
குறித்த பாலமானது மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியாவை இணைக்கிறது.
120 அடி நீளம் கொண்ட இந்த பாலம், கி.மீ 15 இல் அமைந்துள்ளது, இது ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய இராணுவத்தின் பொறியாளர் பணிக்குழுவால் கட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் இந்திய இராணுவத்தினர் இட்டுள்ள பதிவில், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி பிராந்தியங்களில் இரண்டு முக்கியமான பெய்லி பாலங்களை வெற்றிகரமாகத் தொடங்கிய பிறகு, இலங்கையின் மத்திய மாகாணத்தில் B-492 நெடுஞ்சாலையில் கி.மீ 15 இல் 120 அடி நீளமுள்ள மூன்றாவது பெய்லி பாலத்தை கட்டியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்