"சன்னம்" - இது கதையல்ல காவியம்.!!!
கடந்த காலத்தில் நான் எழுதிய, ஈழமண் விடுதலைப் போராட்டம் கண்ட காயங்களின் தொகுப்பாக #கன்னத்தின் #காயங்கள் சிறுகதை தொகுப்பு வெளிவந்தது.
இதில் பத்து கதைகள் உள்ளடங்கியிருந்தது. தற்போது #சன்னம்" என்ற கதை தொகுப்பை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு போராளியின் வலியை இந்த சன்னம் முழுமையாக சொல்லும் என நம்புகிறேன்.
சன்னம் எங்கள் போராட்டத்தின் அனைத்து அத்தியாயங்களிலும் அடையாளமாகிப்போனதொன்று.
பலர் இன்றும் சன்னங்ளைத் தாங்கியபடியே போரின் அடையாளமாக வாழ்கின்றார்கள்.
அதன் வலியை உணர்பவர்களால் மாத்திரமே அதன் வலியை உணர முடியும்.
மண்விடுதலை போரை இறுதிவரை அனுபவித்தவன் என்பதாலும் சன்னமும் என்னைத் துழைத்து எனக்குள் அடையாளமாகி போயிருப்பதாலும், அனைத்து வலிகளையும் உணர்ந்தவன்
என்றவகையிலும் "சன்னத்தை" உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
இனி ஒருபோதும் இம் மண்ணை சன்னங்கள் துழைத்துவிடக்கூடாது. எம்மோடு முடியட்டும் இந்த சன்னங்களின் கோபங்கள்.
எம் வரலாறுகளை அடுத்துவரும் சந்ததிக்கு முடிந்தவரை கடத்துவோம். எதிர்வரும் சந்ததிகளேனும் சுதந்திரத்தை அனுபவிக்கட்டும்.
"எங்கள் விடுதலைப் போராட்டம், வெறும் வார்த்தைகளால் அளவளாவிச் செல்ல திரைக்கதை அல்ல உலகுக்கே பாடம் கற்பித்த வரலாற்றுக் காவியம்"
நான் உங்கள்,
ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்
Dr.ThanaRajeevan
(உளநல ஆலோசகர், பாடலாசிரியர்)
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்