ஒரே வாரத்தில் 238 கோடி வசூல் செய்த பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘தி ராஜாசாப்’
#Cinema
#Collection
#money
#Movie
Prasu
1 hour ago
பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9ம் திகதி வெளியான படம் ‘தி ராஜாசாப்’.
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படம் முதல் வாரத்தில் ரூ.238 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )