கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து - சாரதி பலி!

#SriLanka #Colombo #Police #Accident #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து - சாரதி பலி!

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பேருந்து ஹல்துமுல்ல, உவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும்,  மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தைத் தொடர்ந்து, சாலையின் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை விரைவில் சீரமைத்து, வழக்கமான போக்குவரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியவில்லை என்றும் குறித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

    இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!