புதுடெல்லியில் பொதுநலவாய மாநாட்டில் இலங்கை சபாநாயகர் தலைமையிலான தூதுக் குழு பங்கேற்பு!
இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும் இணைந்துகொண்டனர்.
பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் 28வது மாநாடு (CSPOC) இந்தியாவின் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் தலைமையில் 2026.01.15 ஆம் திகதி புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சம்விதான் சதன் மண்டபத்தில் ஆரம்பமானது.
இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் (IPU) தலைவர் (கலாநிதி) டுலியா அக்சன் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் (CPA) தலைவர் (கலாநிதி) கிரிஸ்தோப்பர் கலிலா உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமைதாங்கும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்