ஜெருசலேமில் உள்ள ஐ.நா தலைமையகத்தை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்
#UN
#Israel
#Building
#Jerusalem
Prasu
4 hours ago
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமையின் தலைமையகத்தை இஸ்ரேல் இடிக்கத் தொடங்கியுள்ளது.
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குழுக்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (UNRWA), தனது ஊழியர்களின் தொலைபேசிகள் மற்றும் கணினி போன்ற சாதனங்களை இஸ்ரேலிய ராணுவம் பிடுங்கிக் கொண்டதாகவும், அலுவலகத்தை விட்டு அவர்களை வெளியேற்றியதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதானது மட்டுமல்லாமல், சர்வதேச விதிகளை மீறும் செயல் என்றும், ஐநா சபையின் சலுகைகள் மற்றும் அதன் பாதுகாப்பிற்கு எதிரான ஒரு தீவிரமான விதிமீறல் எனவும் முகமை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )