பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு
#Death
#Accident
#Pakistan
#fire
#Building
Prasu
3 hours ago
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.
12 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்த நிலையில், நேற்று வரை மீட்புப் பணிகள் நடந்தன. தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 63 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பல்வேறு உடல் பாகங்கள் கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
(வீடியோ இங்கே )