அமெரிக்கா செல்வோருக்கு விசா தொடர்பில் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!

#SriLanka #America #Visa
Thamilini
5 hours ago
அமெரிக்கா செல்வோருக்கு விசா தொடர்பில்  தூதரகம் விடுத்த எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு முன்பு அந்நாட்டின் விசா விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு இலங்கை பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 பார்வையாளர் விசா வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வது மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற செயல்பாடுகளை அனுமதிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இருப்பினும், வேலைவாய்ப்பு அல்லது வேலை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வேறு விசா வகை தேவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

 அமெரிக்காவில் இருக்கும்போது அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பை மேற்கொள்வது நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும் என்றும், எதிர்காலத்தில் நாட்டிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என்றும் தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!