இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நிலச்சரிவு -07 பேர் பலி, 82 பேர் மாயம்!

#SriLanka #Indonesia #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நிலச்சரிவு -07 பேர் பலி, 82 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 82 பேர் காணாமல் போயுள்ளனர். 

 அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து  இன்று (24) அதிகாலை 2:00 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது. 

 வீடுகளின் வரிசையாக மண் குவியல் இடிந்து விழுந்ததாகவும், சுமார் 30 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. 

 நிலச்சரிவு ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால், குவியலுக்கு அடியில் ஏராளமானோர் புதையுண்டுள்ளதாகவும், அவர்களை மீட்க போராடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!