திக்வெல்ல காட்டிற்குள் துப்பாக்கி, கைக்குண்டு, வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு!

#SriLanka #GunShoot #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
திக்வெல்ல காட்டிற்குள் துப்பாக்கி, கைக்குண்டு, வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு!

மாத்தறை - திக்வெல்ல, கிரிநெலியகந்த பிரதேசத்திலுள்ள பற்றைக் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, ரி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தங்கல்ல முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கி ஒன்று, ஒரு கைக்குண்டு மற்றும் 03 ரி-56 ரகத் தோட்டாக்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!