நாட்டில் டெங்கு அபாயம்: நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Dengue #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
நாட்டில் டெங்கு அபாயம்: நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி மாதத்தின் குறித்த காலப்பகுதியில் சுமார் 4,970 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும், இந்த வருடம் இதே காலப்பகுதியில் 6,521 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் செயல் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். 

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 1,627 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!