டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் டொராண்டோ நகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தான சாலை நிலைமைகள் காரணமாக அத்தியாவசிய பயணங்களை தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு குடிமக்களுக்கு டொராண்டோ பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் அவற்றை சுத்தம் செய்ய முழு முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவரை பதிவான அளவுக்கு அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அதற்கு நேரம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் அவசியமாக இருந்தால், தனிப்பட்ட வாகனங்களை தவிர்த்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடும் பனிப்புயலைத் தொடர்ந்து, சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உங்கள் வாகனத்துக்கும் முன்னால் செல்லும் வாகனத்துக்கும் இடையில் போதுமான இடைவெளியை விட்டு செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )