4 கோடி செலவில் மஸ்கெலியாவில் புதிய மிருக வைத்தியசாலை!
மஸ்கெலியா நகரில் ஆலய வீதியில் முன்னைய மிருக வைத்திய சாலைக்கு அருகில் சகல வளங்களும் கொண்ட மிருக வைத்தியசாலைக்கு மஸ்கெலியா மிருக வைத்தியசாலையின் மிருக வைத்திய அதிகாரி தலைமையில் குறித்த விழா நடைபெற்றது.
இந் நிகழ்வில் மஸ்கெலியா சுமாரான விகாரையில் உள்ள பௌத்த மத குரு சமய கிரியைகளை தொடர்ந்து சுப வேளையில் அடிகல் நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய மத்திய மாகாண மிருக வைத்திய அத்தியட்சகர் 1968 ம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்ட வைத்தியசாலை முழுமை பெறாத நிலையில் இருந்தது அதன் காரணமாக இவ் வைத்தியசாலையில் அடிக்கடி வைத்தியர்கள் மாற்றம் பெற்று சென்றனர் காரணம் தங்குமிடம் இல்லை.
தற்போது இன்றைய அரசு முன்வந்து நவீன முறையில் மிருக வைத்தியசாலை வைத்தியர்கள் தங்குமிடம் மற்றும் ஏனைய முழுமைப்படுத்தப்பட்ட மிருக வைத்தியசாலை ஒன்றை அமைக்க நான்கு கோடி ரூபாய் செலவில் மிருக வைத்திய சாலைக்கு உரித்தான இடத்தில் அமைக்க முன் வந்து உள்ளது.
இந்த கட்டிடம் இன்னும் ஒரு வருடத்தில் கட்டப்பட்டு இப் பகுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் பயன் பெற மக்கள் பாவனைக்கு விடப்பட உள்ளது என்றார். இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.
இவ் வைபவத்தில் மத்திய மாகாண மிருக வைத்திய அத்தியட்சகர் மத்திய மாகாண மிருக வைத்திய உதவி அத்தியட்சகர் நாவலப்பிட்டி பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி ஹட்டன் பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி பொகவந்தலாவ பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி நுவரெலியா மாவட்ட மிருக வைத்திய அத்தியட்சகர் அடங்கலாக மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் மஸ்கெலியா மிருக வைத்திய சாலையில் உள்ள ஏனைய அதிகாரிகள் மஸ்கெலியா பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்