யாழ்.இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
யாழ்.இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

வடக்கு மாகாண ரீதியிலான தரம் 01 மாணவர்களின் கால்கோள் விழாவானது இன்றையதினம் யாழ்.

இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் லாவண்யா சுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் க.ஜெ.பிறட்லி கலந்து சிறப்பித்ததுடன் மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றல் வைபவம் இடம்பெற்றது.

பின்னர் விருந்தினர்கள் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து இறை வணக்கம், வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.

அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர், அபிவிருத்தி சங்கத்தினர் மற்று பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!