முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்திய இலங்கை!

#SriLanka #Bus #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்திய இலங்கை!

Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான மைல்கல்.

இலங்கை தனது முதலாவது 'ஸ்மார்ட்' பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இதன் மூலம் பயணிகள் தொடுகையற்ற அட்டைகள் (Contactless cards), டிஜிட்டல் பணப்பைகள் (Digital wallets) மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி பயணக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.

இந்த முன்னேற்றமானது, 'ஸ்மார்ட்' போக்குவரத்துத் துறையில் (Smart mobility) உலகளாவிய முன்னணி நாடுகளின் வரிசையில் இலங்கையையும் இணைத்துள்ளது.

இலங்கையின் முதலாவது திறந்தநிலை போக்குவரத்து கொடுப்பனவு முறைமையின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள் மற்றும் செயல்பாட்டு பங்காளிகளாக விளங்கும் Ceylon Business Appliances (CBA) மற்றும் Nimbus Ventures ஆகியவற்றின் தொழில்நுட்ப தலைமைத்துவத்துடன், இலங்கை அரசுக்கும் மற்றும் முன்னணி வங்கி பங்காளர்களின் ஒத்துழைப்பின் மூலம் இந்த முயற்சி சாத்தியமானது.

பல தசாப்தங்களாக, இலங்கையின் டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளில் CBA முன்னணியில் இருந்து வருகின்றது. நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்திய உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றியுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த CBA நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரம் சாரதா பெர்னாண்டோ, “இது வெறும் பயணச்சீட்டு முறையின் மேம்படுத்தல் மட்டுமல்ல — இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு முழுமையான டிஜிட்டல் புரட்சியாகும். பல வருடங்களாக, மேம்பட்ட தொழில்நுட்பங்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதில் CBA உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, இன்று உலகளாவிய அங்கீகாரம் பெற்ற, பாதுகாப்பான மற்றும் தடையற்ற ஒரு நவீன போக்குவரத்துத் தீர்வை நமது மக்களுக்கு வழங்குவதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். 

பயணிகளின் ஒவ்வொரு Tap மூலமாகவும், அனைத்து இலங்கையர்களுக்கும் வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த தொடர்புகளைக் கொண்ட ஒரு எதிர்காலத்தை நாங்கள் சாத்தியமாக்குகிறோம்.

” என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்த மைல்கல்லானது எமது தொடர்ச்சியான இலக்கைப் பிரதிபலிக்கிறது. 

அதாவது, உலகை வடிவமைத்து வரும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ள, டிஜிட்டல் ரீதியாக அதிகாரமளிக்கப்பட்ட ஓர் இலங்கையை கட்டியெழுப்ப உதவுவதே எமது நோக்கமாகும் என கூறினார். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த CBA நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான

ருவத் பெர்னாண்டோ, “இலங்கையானது உலகளாவிய நவீன போக்குவரத்துத் தொழில்நுட்பங்களுக்கு இணையாக இயங்குவதற்கும், அவற்றை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக உள்ளது என்பதை இந்தத் திட்டம் நிரூபிக்கின்றது. 

உலகத்தரம் வாய்ந்த சிறந்த மென்பொருள் அமைப்புகளையும் புத்தாக்கங்களையும் இலங்கைக்குக் கொண்டு வருவதே எமது அர்ப்பணிப்பாகும்.

இவை பாதுகாப்பானவை, விரிவுபடுத்தக்கூடியவை மற்றும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட தீர்வுகள் ஆகும்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அதிநவீன திறந்தநிலை போக்குவரத்து கொடுப்பனவு தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேம்பட்ட டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளை இலங்கையினால் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை வெற்றிகரமாக இயக்கவும் முடியும் என்பதை நாம் நிரூபித்து வருகிறோம்.

உலகளாவிய டிஜிட்டல் முன்னேற்றங்களை பரிசோதிப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக உள்ள, தொழில்நுட்ப ரீதியாக வலுவான ஒரு நாடாக இலங்கையை நிலைநிறுத்துவதில் இது ஒரு தீர்மானமிக்க தருணமாகும் என குறிப்பிட்டுள்ளார் 

இந்த தொலைநோக்குப் பார்வையின் மீது நம்பிக்கை வைத்த வங்கிப் பங்காளர்களான சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, இலங்கை வங்கி (BOC), மக்கள் வங்கி (People’s Bank) மற்றும் DFCC வங்கி ஆகியவற்றிற்கு, அவர்களின் புதிய பயணச்சீட்டு செயலியின் (Ticketing app) வெற்றிகரமான அறிமுகத்திற்காக CBA தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தச் செயலியானது (App), Nimbus Ventures மற்றும் CBA ஆகியவற்றின் வலுவான மென்பொருள் தீர்வுடன் இணைந்து, PAX A910S பயணச்சீட்டு இயந்திரத்துடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

இது நாடு தழுவிய ரீதியில் செயல்படுத்துவதற்காகவும், நம்பகத்தன்மை மற்றும் விரிவாக்கக்கூடிய வசதிகளுடனும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய டிஜிட்டல் சாதனையை நனவாக்குவதற்காக அயராது உழைத்த பொறியியல், மென்பொருள் மேம்பாடு, பயனர் அனுபவ வடிவமைப்பு (UX), செயல்பாடுகள் மற்றும் களச் செயல்பாட்டுக் குழுக்களுக்கு எமது விசேட நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு Tap பின்னணியிலும் ஒரு புத்தாக்கம் உள்ளது—ஒவ்வொரு பயணத்தின் பின்னணியிலும் CBA நிற்கிறது. நாம் ஒன்றிணைந்து இன்னும் புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த தொடர்புகளைக் கொண்ட இலங்கையை உருவாக்குகின்றோம்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!