ஒன்டாரியோவில் 9 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்

#Arrest #Canada #Ciggerette
Prasu
3 hours ago
ஒன்டாரியோவில் 9 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்

கனடாவின் ஹைவே 16 சாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது 9 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் முன்பே புகையிலை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதால் ஒன்டாரியோவை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் கீழ் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், முத்திரை இல்லாத புகையிலை பொருட்கள் அடங்கிய 23 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் சுமார் 9.1 மில்லியன் சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 41 வயதான ஹர்விந்தர் கஹ்லோன் மீது முத்திரையிடப்படாத புகையிலை வைத்திருத்தல் மற்றும் கடத்தல், தவறான குறியீட்டுடன் புகையிலை பொருட்களை போக்குவரத்து செய்தல், நீதிமன்ற உத்தரவை மீறல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!