பிரபல பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு
#Cinema
#Director
#GunShoot
#Mumbai
#Movie
Prasu
3 months ago
மும்பையின் ஜுஹு பகுதியில் பிரபல பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த குடியிருப்பை நோக்கி சுமார் 4 முதல் 5 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் ரோகித் ஷெட்டி வீட்டிற்குள்ளேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
(வீடியோ இங்கே )